கோவையில் அரசு பஸ் மோதி வங்கி உதவி மேலாளர் பலி

கோவையில் இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வங்கி உதவி மேலாளர் பலியானார்.
கோவையில் அரசு பஸ் மோதி வங்கி உதவி மேலாளர் பலி
Published on

கோவை:

கோவை கணபதி அருகே உள்ள மணியகாரம்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் சஞ்சய் (வயது 30). இவர் பீளமேட்டில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

இன்று காலை இவர் வீட்டில் இருந்து வங்கிக்கு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். மோட்டார் சைக்கிள் காந்திபுரம் 100 அடி ரோட்டில் சென்ற போது அந்தவழியாக கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதியது. இதில் சம்பவஇடத்திலேயே சஞ்சய் பரிதாபமாக இறந்தார். 

இந்த தகவல் கிடைத்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் வீரம்மாள் தலைமையிலான போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சஞ்சயின் உடலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com