பாலக்கோடு அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு- கூலித்தொழிலாளி கைது

பாலக்கோடு அருகே பஸ்சை மெதுவாக இயக்குவதாக கூறி கண்ணாடியை உடைத்த கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தர்மபுரி:

பாலக்கோட்டில் இருந்து தர்மபுரிக்கு அரசு பஸ் வந்தது. இந்த பஸ்சை டிரைவர் ஆனந்தன் ஓட்டி வந்தார். கண்டக்டராக சின்னபையன் இருந்தார்.

இந்த பஸ்சில் புலிக்கரை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சின்னசாமி (வயது 40) என்பவர் பயணம் செய்தார். கட்டைவண்டி போல் பஸ்சை மெதுவாக இயக்குவதாக கூறி சின்னசாமி தகராறு செய்தார். பின்னர் புலிக்கரையில் இறங்கிய அவர் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டார். 

இதுகுறித்து மதிகோன் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து பஸ் கண்ணாடியை உடைத்த சின்னசாமியை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com