ஜனாதிபதியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு

டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தனது சுற்றுப்பயணத்தின் மூன்றாம் நாளான இன்று ஜனாதிபதியை சந்தித்து பேசினார்.
ஜனாதிபதியுடன் தமிழக ஆளுநர்
ஜனாதிபதியுடன் தமிழக ஆளுநர்
Published on

புதுடெல்லி:

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் முகாமிட்டுள்ள அவர், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். 

டெல்லி சுற்றுப்பயணத்தின் மூன்றாம் நாளான இன்று ஜனாதிபதி மாளிகை சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, தமிழகம் சார்ந்த முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக பேசினார். இன்று மாலை ஆளுநர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com