நாகாலாந்தின் புதிய முதல்வர் நெய்பியூ ரியோ - பலத்தை நிரூபிக்க கவர்னர் உத்தரவு

நாகாலாந்து முதல்வராக பொறுப்பேற்க தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி தலைவர் நெய்பியூ ரியோவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளதோடு, சட்டசபையில் பெரும்பாண்மையை நிரூபிக்க உத்தரவிட்டுள்ளார்.
நாகாலாந்தின் புதிய முதல்வர் நெய்பியூ ரியோ - பலத்தை நிரூபிக்க கவர்னர் உத்தரவு
Published on

கோஹிமா:

நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க 12 இடங்களிலும், நாகா மக்கள் முன்னணி 27 இடங்களிலும், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 16 இடங்களிலும் வெற்றி பெற்றது. எந்த கட்சிக்கும் பெரும்பாண்மை கிடைக்காததால், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க பா.ஜ.க முடிவு செய்தது.

ஆனால், நாகா மக்கள் கட்சி அதிக இடங்களில் வென்றுள்ளதால் தங்களை ஆட்சியமைக்க கவர்னர் அழைக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியது. இந்நிலையில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி தலைவர் நெய்பியூ ரியோவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் 16-ம் தேதி சட்டசபையில் பெரும்பாண்மையை நெய்பியூ ரியோ அரசு நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டுள்ளார். பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ ஆதரவு இருப்பதால் அவரது அரசு பெரும்பாண்மையை நிரூபித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. #NeiphiuRio #TamilNews

X

Maalai Malar
www.maalaimalar.com