கவர்னர் பன்வாரிலால் மலைக்கோட்டை- ஸ்ரீரங்கம் கோவில்களில் சுவாமி தரிசனம்

திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
கவர்னர் பன்வாரிலால் மலைக்கோட்டை- ஸ்ரீரங்கம் கோவில்களில் சுவாமி தரிசனம்
Published on

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து ஆய்வுப்பணி, சுகாதார தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் படி திருச்சியில் இன்று பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் ஆய்வுப் பணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.

விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர் வளர்மதி, திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி, பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மணிசங்கர், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மாநகர போலீஸ் கமி‌ஷனர் அமல்ராஜ் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் கவர்னர் திருச்சி சுற்றுலா மாளிகைக்கு சென்று தங்கினார்.

இன்று காலை திருச்சி மலைக்கோட்டை தாயுமான சாமி கோவிலுக்கு சென்ற கவர்னர் பன்வாரிலால் புரோகித், மாணிக்க விநாயகர், தாயுமானவர், உச்சிப்பிள்ளையார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று மூலவர் ரெங்கநாதர் மற்றும் தாயார் சன்னதிகளில் வழிபாடு செய்தார். முன்னதாக ரெங்கநாதர் கோவிலுக்கு வந்த கவர்னருக்கு வெள்ளிக்குடத்தில் புனிதநீர் நிரப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். விழாவில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்று வாழ்த்தி பேசுகின்றனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் செயலாளர் விஞ்ஞானி சிவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார்.

பட்டமளிப்பு விழா முடிந்ததும் திருச்சி சுற்றுலா மாளிகையில் மாவட்ட கலெக்டர் ராசாமணி மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகளுடன் திட்டப்பணிகள் பற்றி ஆய்வு நடத்துகிறார்.

மதிய உணவுக்கு பின்னர் சுற்றுலா மாளிகையில் பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை வாங்குகிறார். 3.30 மணிக்கு சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்படும் கவர்னர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கழிவறையை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

அங்கு அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு கண்காட்சியையும் திறந்து வைக்கிறார். கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்து விட்டு, கருமண்டபம் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுரம் செயலாக்க மையத்தை பார்வையிடுகிறார்.

மாலை 4.35 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு 5.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்தை அடைகிறார். மாலை 6 மணிக்கு திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

கவர்னர் வருகையால் திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கவர்னர் கோவிலுக்கு செல்லும் பாதைகள், தூய்மை இந்தியா திட்டப்பணிகளை பார்வையிடும் மத்திய பஸ் நிலையம் பகுதிகளிலும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். #Tamilnewsதிருச்சி:

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து ஆய்வுப்பணி, சுகாதார தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் படி திருச்சியில் இன்று பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் ஆய்வுப் பணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.

விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர் வளர்மதி, திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி, பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மணிசங்கர், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மாநகர போலீஸ் கமி‌ஷனர் அமல்ராஜ் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் கவர்னர் திருச்சி சுற்றுலா மாளிகைக்கு சென்று தங்கினார்.

இன்று காலை திருச்சி மலைக்கோட்டை தாயுமான சாமி கோவிலுக்கு சென்ற கவர்னர் பன்வாரிலால் புரோகித், மாணிக்க விநாயகர், தாயுமானவர், உச்சிப்பிள்ளையார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று மூலவர் ரெங்கநாதர் மற்றும் தாயார் சன்னதிகளில் வழிபாடு செய்தார். முன்னதாக ரெங்கநாதர் கோவிலுக்கு வந்த கவர்னருக்கு வெள்ளிக்குடத்தில் புனிதநீர் நிரப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். விழாவில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்று வாழ்த்தி பேசுகின்றனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் செயலாளர் விஞ்ஞானி சிவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார்.

பட்டமளிப்பு விழா முடிந்ததும் திருச்சி சுற்றுலா மாளிகையில் மாவட்ட கலெக்டர் ராசாமணி மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகளுடன் திட்டப்பணிகள் பற்றி ஆய்வு நடத்துகிறார்.

மதிய உணவுக்கு பின்னர் சுற்றுலா மாளிகையில் பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை வாங்குகிறார். 3.30 மணிக்கு சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்படும் கவர்னர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கழிவறையை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

அங்கு அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு கண்காட்சியையும் திறந்து வைக்கிறார். கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்து விட்டு, கருமண்டபம் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுரம் செயலாக்க மையத்தை பார்வையிடுகிறார்.

மாலை 4.35 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு 5.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்தை அடைகிறார். மாலை 6 மணிக்கு திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com