செவிலியரை அடித்ததாக புகார்- அரசு பெண் டாக்டர் இடமாற்றம்

செவிலியரை அடித்ததாக எழுந்த புகாரையடுத்து அரசு பெண் டாக்டர் அரூர் அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இடமாற்றம்
இடமாற்றம்
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு டாக்டராக பணிபுரிந்து வந்தவர் கனிமொழி. சிகிச்சை தொடர்பான அறிக்கையை தவறாக எழுதியதாக கூறி ஒரு செவிலியரை இவர் அடித்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து அங்கு பணிபுரியும் செவிலியர்களில் 20-க்கும் மேற்பட்டோர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பென்னாகரம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் கனிமொழி மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது.

இதுதொடர்பாக துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மகப்பேறு பிரிவு டாக்டர் கனிமொழி அரூர் அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com