

சென்னை:
தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் டிசம்பர் மாதம் 1-ந் தேதி நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாது நபிக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசின் தலைமை காஜி கடந்த 20-11-2017 அன்று அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், 19-11-2017 அன்று நிலா தெரியவில்லை என்பதால், மிலாது நபிக்கு டிசம்பர் 2-ந் தேதி (சனிக்கிழமை) அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அவரது கடிதத்தை அரசு கவனமுடன் பரிசீலித்தது. அதன்படி, டிசம்பர் 2-ந் தேதி மிலாது நபி பண்டிகைக்கு அரசு விடுமுறை அளிக்கப்படும் என்றும், டிசம்பர் 1-ந் தேதி மிலாது நபிக்கு விடுமுறை என்று ஏற்கனவே பிறக்கப்பட்டிருந்த உத்தரவு நிறுத்தப்படுகிறது என்றும் தெரிவித்துக்கொள்ளப் படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.