ஆண்டிப்பட்டி அருகே காசோலை மோசடி வழக்கில் அரசு ஊழியர் கைது

ஆண்டிப்பட்டி அருகே காசோலை மோசடி வழக்கில் சென்னையைச் சேர்ந்த போக்குவரத்துக்கழக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

ஆண்டிப்பட்டி:

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் கணேஷ்குமார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். ஆண்டிப்பட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரிடம் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் பெற்றார். ஆனால் சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுப்புராஜ் தனது பணத்தை திரும்ப தருமாறு கேட்டார். அதற்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காசோலை ஒன்றை கணேஷ்குமார் வழங்கினார். அதனை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்தது.

இது குறித்து சுப்புராஜ் ஆண்டிப்பட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, கணேஷ்குமாரை ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

ஆண்டிப்பட்டி போலீசார் கணேஷ்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com