அரசு பஸ் கண்ணாடி உடைப்பு- கஞ்சா வியாபாரி கைது

அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் புத்தேரியில் கடந்த 6-ந் தேதி ஒரு அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் மீது கல் வீசியவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், கல்வீச்சில் ஈடுபட்டவர் கலுங்கடி அம்மன்கோவில் தெருவை சேர்ந்த கஞ்சா வியாபாரி வேல்முருகன் (வயது 27) என்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார், நேற்று வேல்முருகனை கைது செய்தனர். அவர் மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் 2 கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com