திண்டுக்கல் அருகே போலீசிடம் தகராறு செய்த அரசு பஸ் டிரைவர் கைது

திண்டுக்கல் அருகே போலீசிடம் தகராறு செய்த அரசு பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் அருகே போலீசிடம் தகராறு செய்த அரசு பஸ் டிரைவர் கைது
Published on

கொடைரோடு:

அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் நாகேந்திரன். இவர் அம்மையநாயக்கனூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து நாகேந்திரன் சோதனை செய்தார். அந்த மோட்டார் சைக்கிளை அம்மையநாயக்கனூரைச் சேர்ந்த அரவிந்தன் (29) என்பவர் ஓட்டி வந்தார்.

இவர் அரசு பஸ் டிரைவர் ஆவார், சோதனையில் ஈடுபட்ட நாகேந்திரனிடம் அரவிந்தனும் அவருடன் வந்த நண்பர் அருண் (23) என்பவரும் தகராறு செய்தனர். மேலும் அவரை பணி செய்ய விடாமல் தடுத்தனர். 

இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அரவிந்தன், அருண் ஆகியோரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com