கோயம்பேடு அருகே அரசு பஸ் மோதி பெண் பலி

கோயம்பேடு அருகே அரசு பஸ் மோதி பெண் பலியானார். இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்பேடு அருகே அரசு பஸ் மோதி பெண் பலி
Published on

சென்னை:

மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி மகேஸ்வரி (49). இவர் இன்று காலை ஆயுத பூஜைக்காக பொருட்கள் வாங்க மொபட்டில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்றார். அப்போது 100 அடி சாலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் திரும்பியபோது பின்னால் நெல்லையில் இருந்து வந்த அரசு போக்குவரத்து கழக பஸ், மொபட் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மகேஸ்வரி இறந்தார்.

இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com