உசிலம்பட்டியில் அரசு பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே அரசு பஸ் மோதியதில் மூதாட்டி உயிரிழந்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டியில் அரசு பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு
Published on

உசிலம்பட்டி:

உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூரைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மனைவி லட்சுமி (வயது 61).

இவர் இன்று காலை அங்குள்ள மதுரை சாலையை கடக்க முயன்றார். அப்போது மதுரையை நோக்கி அரசு பஸ் வேகமாக வந்தது.

அந்த பஸ் எதிர்பாராத விதமாக சாலையை கடந்த லட்சுமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து செக்கானூரணி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com