சேரன்மகாதேவி அருகே அரசு பஸ் மோதி முதியவர் உயிரிழப்பு

சேரன்மகாதேவி அருகே அரசு பஸ் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

சேரன்மகாதேவி:

சேரன்மகாதேவி அருகே உள்ள மேலக்கூனியூர் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 60). இவர் இன்று காலை கடைக்கு செல்வதற்காக கூனியூருக்கு சென்றார். அப்போது நாகர்கோவிலில் இருந்து பாபநாசம் நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக கிருஷ்ணன் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேரன் மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com