அரசு கலை கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 38 சிறப்பு மையங்கள்

அரசு கலை கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 38 சிறப்பு மையங்களை கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்து இருக்கிறது.
ஆன்லைன்
ஆன்லைன்
Published on

சென்னை:

கொரோனா தொற்று காரணமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு இந்த ஆண்டில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்து இருக்கிறது. அரசு கலை கல்லூரிகளுக்கு www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற இணையதள முகவரியில் இன்று (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அரசு கலை கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உதவுவதற்கு தமிழகத்தில் 38 சிறப்பு மையங்களை கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்து இருக்கிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com