கவுண்டம்பாளையம் அருகே தொழிலாளி தற்கொலை

கவுண்டம்பாளையம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம் அருகே தொழிலாளி தற்கொலை
Published on

கவுண்டம்பாளையம்:

கோவை கவுண்டம்பாளையம் சீனிவாசா நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 41). ஒர்க்ஷாப் தொழிலாளி. இவரது மனைவி பிந்துராணி. தனியார் கம்பெனி ஊழியர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

சிவக்குமார் கடந்த சில நாட்களாக வேலையின்றி இருந்தார். இந்த நிலையில் மகள் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர தயாரானார். நேற்று மனைவி வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். மகனும், மகளும் நல்லாம்பாளையத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றனர்.

தனியே இருந்த சிவக்குமார் வீட்டில் இருந்த மண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளித்தார். தீ மளமளவென உடல் முழுவதும் பற்றி எரிந்தது. வேதனை தாங்கமுடியாமல் சிவக்குமார் அலறி சத்தம்போட்டார்.

சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிவக்குமார் மீது பற்றி எரிந்த தீயை அணைத்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் மகளை கல்லூரியில் சேர்க்க பணம் இல்லாத இருந்த நேரத்தில் சிவக்குமார் தற்கொலை செய்து கொண்டார். மகளை படிக்க வைக்க முடியாத விரக்தியில் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com