சாய்னா மற்றும் சிந்து எனக்கு கிடைத்த வைரங்கள் - பயிற்சியாளர் கோபிசந்த் நெகிழ்ச்சி

சாய்னா நேவால் மற்றும் பிவி சிந்து எனக்கு கிடைத்த விலைமதிப்பற்ற வைரங்கள் என இந்திய பேட்மிண்டன் தலைமை பயிற்சியாளர் கோபிசந்த் கூறினார். #Gopichand #PVSindhu #SainaNehwal
சாய்னா மற்றும் சிந்து எனக்கு கிடைத்த வைரங்கள் - பயிற்சியாளர் கோபிசந்த் நெகிழ்ச்சி
Published on

புதுடெல்லி:

இந்திய பேட்மிண்டன் தலைமை பயிற்சியாளர் கோபிசந்த் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 'ஒரு பயிற்சியாளராக சாய்னா மற்றும் சிந்து இருவரையும் நான் சமமாக நடத்துகிறேன். அவர்கள் இருவரும் எனக்கு கிடைத்த விலைமதிப்பற்ற வைரங்கள்.

நாள்தோறும் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி அமையும். வெற்றி, தோல்வி என்பது வீரர்களை உற்றாகப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும். நான் என்னுடைய வீரர்களிடமிருந்து பதக்கங்களை எதிர்பார்க்கவில்லை. அடுத்த ஒலிம்பிக்கில் அவர்கள் புதிய சாதனைப்படைக்க வேண்டும். 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருவரும் சிறப்பாக செயல்படுவர்' என கூறினார்.

பேட்மிண்டனில் புகழ்பெற்ற பயிற்சியாளராக விளங்கும் கோபிசந்திற்கு துரோணாச்சார்யா விருது வழங்கப்பட்டுள்ளது. சாய்னா நேவால், பி.வி.சிந்து, பாரிப்பள்ளி காசியப் ஆகியோரின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகித்துள்ளார்.இவரது வாழ்க்கை வரலாற்றை முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரர்களான சஞ்சய் சர்மாவும் சாச்சி சர்மாவும் இணைந்து "புல்லேலா கோபிசந்த்: உலகம் அவரது காலடியில்" என்ற நூலாக வெளியிட்டுள்ளனர். #Gopichand #PVSindhu #SainaNehwal

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com