கோபி அருகே இன்று ஓட்டலில் திடீர் தீ விபத்து

கோபி அருகே இன்று ஓட்டலில் திடீர் தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட ஓட்டல்.
தீ விபத்து ஏற்பட்ட ஓட்டல்.
Published on

கோபி:

கோபி அருகே உள்ள ஒத்தக்குதிரையில் ஓட்டல் நடத்தி வருபவர் ஆனந்த ஜோதி. நேற்று இரவு வியாபாரம் முடிந்து ஓட்டலை பூட்டிவிட்டு சென்றனர்.

இந்த நிலையில் இன்று காலை ஓட்டல் திறக்கப்பட் டது. உணவு தயாரிக்க ஊழியர்கள் தயார் ஆனார்கள்.

அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர். தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். கோபி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். இந்த நிலையில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது. ஆனால் சேதம் ஏதும் ஏற்படவில்லை. கியாஸ் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com