அரியலூர் மாவட்டத்தில் 16 பேர் குண்டர் சட்டத்தில் கைது

அரியலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 16 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது
கைது
Published on

அரியலூர்:

ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் அரியலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து இருப்பதாக புகார் வந்தது. இதையடுத்து மாவட்டத்தில் தீவிர சோதனை நடத்த எஸ்.பி. சீனிவாசன் உத்தரவிட்டார். 

போலீசார் சோதனை நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சிய ஆண்டிமடம் அருகே சிலம்பூர் கீழத்தெ ருவைச் சேர்ந்த சக்திவேல் (வயது 30), அகரம் நடுத்தெ ருவைச் சேர்ந்த பொய்யா மொழி (43), அஜித் (23), பட்டி தெரு சுதாகர் (48), மேல தெரு காமராசு, அழகாபுரம் தெற்கு தெரு சங்கர் (40), ஐயூர் தெற்கு தெரு பிரபு (36), வடக்கு தெரு சேதுபதி (55), பிள்ளை யார் கோவில் தெரு செல் வக்குமார் (45) , கங்குழி தெற்கு தெரு ரவி (48), வடக்கு தெரு காமராஜ் (45), கூலத்தூர் மேலத்தெரு ராமசாமி (29), இளவரசன் (33), மேலநெடுவாய் மேற்கு தெரு ஜேம்ஸ் (40), சிவலிங் கபுரம் அருள்சாமி (43), வல் லம் மேற்கு தெரு சந்தோஷ் குமார் (27) ஆகிய 16 பேரை கைது செய்தனர். 

அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. சீனிவாசன், அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னாவிடம் பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவிட்டதையடுத்து 16 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com