குண்டர் சட்டத்தில் கைதான சேலம் மாணவி வளர்மதி கோவை சிறையில் உண்ணாவிரதம்

தன்மீது உள்ள குண்டர் சட்டத்தை நிபந்தனை இன்றி திரும்ப பெற வலியுறுத்தி சேலம் மாணவி கோவை சிறையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கி உள்ளார்.
குண்டர் சட்டத்தில் கைதான சேலம் மாணவி வளர்மதி கோவை சிறையில் உண்ணாவிரதம்
Published on

கோவை:

தமிழ்நாடு பொதுநல மாணவர் எழுச்சி இயக்க சேலம் மாவட்ட பொருளாளரும் பெரியார் பல்கலைகழக மாணவியுமான வளர்மதி கடந்த ஜூன் மாதம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் சிறையில் உள்ள வளர்மதி நெடுவாசல், கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டம், கடலூர், சிதம்பரம் மாவட்டங்களில் அமுல்படுத்தபடும் பெட்ரோ கெமிக்கல் திட்டம் ஆகியவற்றை கைவிட வலியுறுத்தியும், சிறையில் தன்னை பார்க்க வருபவர்களை உளவுத்துறை மிரட்டுவதை கண்டித்தும், தன்மீது உள்ள குண்டர் சட்டத்தை நிபந்தனை இன்றி திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார்.

இதனால் கோவை மத்திய சிறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com