நாரத முனிவர் ‘கூகுள்’ போன்றவர் - குஜராத் முதல்-மந்திரி பேச்சால் மீண்டும் சர்ச்சை

குஜராத் முதல்-மந்திரி விஜய் ருபானி, ‘கூகுள்’ தேடுதளத்தை புராண காலத்து நாரதருடன் ஒப்பிட்டு பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #GujaratCM #VijayRupani
நாரத முனிவர் ‘கூகுள்’ போன்றவர் - குஜராத் முதல்-மந்திரி பேச்சால் மீண்டும் சர்ச்சை
Published on

ஆமதாபாத்:

திரிபுரா முதல்-மந்திரி பிப்லாப் தேவ் சில நாட்கள் முன்பு, மகாபாரத காலத்திலேயே இணையதளம் இருந்தது என்று கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல இப்போது குஜராத் முதல்-மந்திரி விஜய் ருபானி, ‘கூகுள்’ தேடுதளத்தை புராண காலத்து நாரதருடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார். இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆமதாபாத்தில் ஆர்.எஸ்.எஸ்.சின் துணை அமைப்பான விஷ்வ சம்வத் கேந்திரா நடத்திய ஒரு நிகழ்ச்சியில் பேசிய விஜய் ருபானி, “கூகுள் தகவல்களை தரும் ஒரு ஆதார தளம். எனவே நாரத முனிவரையும் கூகுளுடன் ஒப்பிட்டு கூறலாம். ஏனென்றால், அவருக்கு உலகில் எந்த மூலையில் நடைபெறும் பல்வேறு சம்பவங்கள் பற்றிய தகவல்களும் தெரியும்.

மகாபாரத காலத்தில் நாரத முனிவர் பலராமுக்கு (கிருஷ்ணரின் சகோதரர்) செய்திகளை தெரிவித்துவந்தார். இதேபோல பல்வேறு காலகட்டங்களில் அவர் பலருக்கும் தகவல்களை தெரிவித்து வந்திருக்கிறார்” என்று கூறினார்.   #GujaratCM #VijayRupani #tamilnews 

X

Maalai Malar
www.maalaimalar.com