ஆந்திராவில் டீசல் ஏற்றி வந்த சரக்கு ரெயில் தடம்புரண்டு தீப்பிடித்தது

ஆந்திர மாநிலத்தில் டீசல் ஏற்றி வந்த சரக்கு ரெயில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்தது.
தீப்பற்றி எரியும் சரக்கு ரெயில்
தீப்பற்றி எரியும் சரக்கு ரெயில்
Published on

விஜயவாடா:

ஆந்திர மாநிலத்தில் டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரெயில், தன்கூடூர்-சுராரெட்டி பாலம் இடையே இன்று அதிகாலையில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. தடம்புரண்ட வேகத்தில் டீசல் டேங்கர்களில் இருந்து டீசல் கசிந்து தீப்பிடித்தது. பல்வேறு பெட்டிகளில் நிரப்பப்பட்டிருந்த டீசல் தீப்பிடித்ததால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான டீசல் எரிந்தது. 

X

Maalai Malar
www.maalaimalar.com