சென்னை விமான நிலையத்தில் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - 3 பயணிகளிடம் விசாரணை

சென்னை விமான நிலையத்தில் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்த போலீசார் 3 பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சென்னை:

துபாயில் இருந்து மும்பை வழியாக சென்னைக்கு நேற்று நள்ளிரவு ஒரு விமானம் வந்தது.

இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து விமான நிலையத்தில அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

விமானத்தில் வந்த பயணிகளிடம் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது மும்பையை சேர்ந்த தீபன் அசோக்சதார் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் 1.19 கிலோ கிராம் எடை கொண்ட தங்க கம்பிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ.45 லட்சம் ஆகும்.

சென்னையில் இருந்து மலேசியாவுக்கு இன்று அதிகாலை செல்லும் ஏர் ஏசியா விமானத்தில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது திருவாரூரை சேர்ந்த சையது இப்ராகிம், விருதுநகரை சேர்ந்த அப்துல் அஜிஸ் ஆகிய பயணிகளின் டிராலி பேக்கில் ரு.45 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com