மதுரையில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

மதுரையில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை மர்ம மனிதர்கள் திருடிச்சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை திருட்டு
நகை திருட்டு
Published on

மதுரை:

மதுரை கீழ சந்தைப்பேட்டை மாயாண்டி சந்து பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 47). நேற்று காலை இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார்.

அதன்பின்னர் இரவில் அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு தங்கராஜ் அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் அறை முழுவதும் சிதறி கிடந்தது.

எனவே வீட்டுக்குள் திருடர்கள் வந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தெப்பக்குளம் போலீசாருக்கு தங்கராஜ் தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்த பார்வையிட்டனர்.

பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், 30 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருப்பதாக போலீசாரிடம் தங்கராஜ் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம மனிதர்கள் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com