கும்பகோணத்தில் குடோனில் தீ விபத்து; ரூ.15 லட்சம் பொருட்கள் சேதம்

கும்பகோணம் யாகச்சாலை தெருவில் உள்ள குடோனில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.
கும்பகோணத்தில் குடோனில் தீ விபத்து; ரூ.15 லட்சம் பொருட்கள் சேதம்
Published on

கும்பகோணம்:

கும்பகோணம் பெரியக் கடை தெருவில் வசிப்பவர் சந்திரசேகர் (வயது 45). இவர் சூடம், பத்தி, சாம்பிராணி தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவர் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் குடோன் கும்பகோணம் யாகச்சாலை தெருவில் உள்ளது. இங்குள்ள குடோனில் ஏராளமான பத்தி, சாம்பிராணி, சூடம் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று காலை 11 மணி அளவில் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் தீ பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதி புகை மண்டலமாக மாறியது. இதில் பொதுமக்கள் அவதிபட்டனர். இதுபற்றி அப்பகுதி மக்கள் கும்பகோணம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் 2 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

இதில் அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள எரிந்து சேதமாகி விட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த தீ விபத்து காரணமாக கும்பகோணம் யாக சாலை தெருவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com