

சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் பூச்சிக்காடு ஆர்.சி. கோவில்தெருவை சேர்ந்தவர் ஜேசு. இவரது மனைவி தெரசம்மாள் (வயது 68). இவர்களுக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. இந்நிலையில் தோட்டத்தில் இலை பறிப்பதற்காக இன்று காலை தெரசம்மாள் சென்றார்.
அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் திடீரென்று அவர் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை பறித்துவிட்டு தப்பி ஓடி விட்டான்.
இது குறித்து அவர் தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்து விட்டு தப்பி சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.