கோபி அருகே மஞ்சள் வியாபாரி வி‌ஷம் குடித்து தற்கொலை

கோபி அருகே மஞ்சள் வியாபாரி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கோபி:

கோபி அருகே ல. தொட்டிகபாளையம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது45). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மஞ்சள் வியாபாரம் செய்து வந்தார். தனது பாட்டி நாகம்மாளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் சீனிவாசனுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். அதனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தனர்.

இதனால் மனவேதனையில் இருந்த சீனிவாசன் நேற்று வீட்டில் வி‌ஷம் குடித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சீனிவாசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com