நம்பர்-1 என்பதே இலக்கு; ஆனால் ஒரு வருடத்திற்குள் முடியாது- இலங்கை கேப்டன் சொல்கிறார்

இலங்கை டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சண்டிமல், நம்பர்-1 தான் தனது இறுதி இலக்கு என்றும் அது ஒரு வருடத்திற்குள் முடியாது என்றும் கூறியுள்ளார்.
நம்பர்-1 என்பதே இலக்கு; ஆனால் ஒரு வருடத்திற்குள் முடியாது- இலங்கை கேப்டன் சொல்கிறார்
Published on

இதனால் டெஸ்ட் அணிக்கு விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனும் ஆன சண்டிமல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கை அணியை நம்பர்-1 இடத்திற்கு கொண்டு வருவதே தனது குறிக்கோள் என்றும், ஆனால் அது ஒரு வருடத்திற்குள் நடக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சண்டிமல் கூறுகையில், ‘‘என்னுடைய இறுதி இலக்கு என்னவெனில், இலங்கை அணி உலகத் தரவரிசையில் முதல் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான். ஆனால், இது ஒரே நாளிலோ, ஒரு ஆண்டிலோ நடந்து விடாது.

நாங்கள் கடுமையாக உழைத்து அந்த இடத்திற்கு செல்ல வேண்டும். நாங்கள் இளம் வீரர்களை பெற்றுள்ளோம். அவர்கள் தங்களது அனுபவத்தை வெளிக்கொண்டு வரவேண்டும். படிப்படியாக நாங்கள் முன்னேற வேண்டும். தற்போதைய 7-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு, அதற்குப்பின் 5-வது இடத்திற்கு. இப்படி நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது’’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com