ஒரு மணி நேரத்தில் சென்னை - ஐதராபாத்: புதிய விமானச் சேவை தொடக்கம்

சிங்காரச் சென்னையையும் சுந்தர ஐதராபாத்தையும் ஒரு மணி நேரம் 10 நிமிடங்களுக்குள் இணைக்கும் இடைநில்லா விமானச் சேவை இன்று தொடங்கியது.
ஐதராபாத் நகரம்
ஐதராபாத் நகரம்
Published on

சிங்காரச் சென்னையையும் சுந்தர ஐதராபாத்தையும் ஒரு மணி நேரம் 10 நிமிடங்களுக்குள் இணைக்கும் இடைநில்லா விமானச் சேவை இன்று தொடங்கியது.

தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐதராபாத் நகருக்கு சென்னையில் இருந்து அன்றாடம் ஆயிரக்கணக்கானவர்கள் செல்கின்றனர். இதேபோல், ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கும் பலர் வந்து செல்கின்றனர்.

ரெயில் அல்லது பஸ் மூலம் சென்று வருபவர்கள் சுமார் 12 மணி நேரம் பயணிக்க வேண்டிய நிலையில் விமானம் மூலம் சென்றால் சுமார் ஒன்றரை  மணி நேரத்தில் சென்றடைய முடியும்.

இந்நிலையில், சிங்காரச் சென்னையையும் சுந்தர ஐதராபாத்தையும் ஒரு மணி நேரம் 10 நிமிடங்களுக்குள் இணைக்கும் இடைநில்லா விமானச் சேவையை ‘கோ ஏர்’ நிறுவனம் இன்று தொடங்கியுள்ளது.

இன்று முதல் தொடங்கிய கோ ஏர் நிறுவனத்தின் இந்த  புதிய விமானச் சேவைக்கான பயணக் கட்டணமாக 2099 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com