கொலை மிரட்டல் விடும் போதைப்பொருள் கும்பல் - உயிர்ப்பயத்தில் இருக்கும் கோவா மந்திரி

கோவா மந்திரி வினோத் பால்யேகாருக்கு போதைப்பொருள் கும்பல் ஒன்று தினமும் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை மிரட்டல் விடும் போதைப்பொருள் கும்பல் - உயிர்ப்பயத்தில் இருக்கும் கோவா மந்திரி
Published on

பனாஜி:

கோவாவின் நீர்வள மந்திரி வினோத் பால்யேகார் சமீபத்தில் ஒரு உள்ளூர் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்பேட்டியில் தன்னை போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் தினமும் மிரட்டுவதாக கூறினார். காலை கடற்கரையில் வாக்கிங் செய்யும் போது கொலை மிரட்டல் விடுகின்றனர். இதனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த விசாரணை அறிக்கையை 2 வாரத்தில் சமர்பிக்குமாறு மாநில பாதுகாப்பு கமிட்டி, போலீஸ் புலனாய்வுத் துறையிடம் கேட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். பிற மாநில மந்திரிகளுக்கு வழங்கப்படுவது போன்று பாதுகாப்பு வினோத்திற்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மாநிலத்தின் மந்திரிக்கே கொலை மிரட்டல் விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com