மனோகர் பாரிக்கர் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை தகனம்

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. #ManoharParikkar #Parrikar #RIPParrikar
மனோகர் பாரிக்கர் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை தகனம்
Published on

முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல் மந்திரியுமான மனோகர் பாரிக்கர் (வயது 63) உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாரிக்கர் மறைவுக்கு மத்திய அமைச்சரவை சார்பில் இன்று இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளது.

பின்னர் மாலை 4 மணியளவில் இறுதிச்சடங்குகள் செய்யப்படுகின்றன. இறுதிச்சடங்கு முடிந்ததும் மாலை 5 மணியவில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு பாரிக்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com