வெளிநாட்டு வேலைக்கு சென்ற கணவர் வராததால் இளம்பெண் தற்கொலை

வெளிநாட்டில் கூலி வேலைக்கு சென்ற கணவரை அழைத்தும் வராததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வெளிநாட்டு வேலைக்கு சென்ற கணவர் வராததால் இளம்பெண் தற்கொலை
Published on

ஸ்ரீ முஷ்ணம்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கொளத்தகுறிச்சியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது31). இவரது மனைவி செல்வராணி (25). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது.

தற்போது ரவிச்சந்திரன் வெளிநாட்டில் கூலி வேலைப்பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வராணி வெளிநாட்டில் உள்ள அவரது கணவர் ரவிச்சந்திரன் செல்போனுக்கு தொடர்பு கொண்டு உங்களை பார்க்க வேண்டும்.

உடனே ஊருக்கு வாருங்கள் என கூறினார். ஆனால் ரவிச்சந்திரன் தற்போது அலுவலகத்தில் விடுமுறை கிடைக்கவில்லை எனக் கூறி ஊருக்கு வர மறுத்து விட்டார்.

இதனால் மனம் உடைந்த செல்வராணி நேற்று மாலை வீட்டில் உள்ள வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்வ ராணிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டும் செல்லும் வழியிலேயே செல்வராணி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்ய பட்டது. புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணமான 6 வருடத்தில் செல்வராணி இறந்ததால் சிதம்பரம் ஆர்.டி.ஓ. ராஜேந்திரனும் விசாரணை நடத்தி வருகிறார். இறந்து போன செல்வராணிக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com