ஏடாகூடமாக குறுஞ்செய்தி அனுப்பிய பேராசிரியரை கல்லூரியில் வைத்தே நையப்புடைத்த மாணவிகள்

இரட்டை அர்த்தம் தரும் வகையில் குறுஞ்செய்தி அனுப்பிய பேராசிரியரை கல்லூரி வளாகத்தில் வைத்தே மாணவிகள் அடித்து துவைத்த சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் நடந்துள்ளது.
ஏடாகூடமாக குறுஞ்செய்தி அனுப்பிய பேராசிரியரை கல்லூரியில் வைத்தே நையப்புடைத்த மாணவிகள்
Published on

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் அரசு மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் தன்னிடம் பயிலும் மாணவி ஒருவருக்கு இரட்டை அர்த்தம் தரும் வகையில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனை அடுத்து, ஒன்று திரண்ட மாணவிகள் பேராசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் மாணவிகள் இணைந்து கல்லூரி வளாகம் கூட என பாராமல், பேராசிரியரை அடித்து இழுத்து கல்லூரி முதல்வர் அலுவலகத்திற்கு சென்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில உயர்கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com