வத்தலக்குண்டு அருகே தூக்குப்போட்டு மாணவி தற்கொலை

வத்தலக்குண்டு அருகே 9ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை
தற்கொலை
Published on

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அருகே உள்ள வி.உச்சப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் அரசு பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் சுபாஷினி (வயது 15). இவர் பட்டிவீரன்பட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் சுபாஷினி நேற்று காலை அப்பகுதியில் உள்ள தனது தாத்தாவின் தோட்டத்திற்கு சென்று, அங்குள்ள மின் மோட்டார் அறையில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதற்கிடையே அவரை காணவில்லை என்று பெற்றோர் தேடியபோது, சுபாஷினி தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 

இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப்பதிவு செய்து, சுபாஷினி தற்கொலைக்கான காரணம் என்னவென்று விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com