அழகிப்போட்டிக்கு நிரந்தர தடைகேட்டு 5 ஆண்டுகளாக போராடும் மாணவி

அனைத்து கல்லூரிகளிலும் அழகிப்போட்டிக்கு நிரந்தர தடைகேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவி ஒருவர் 5 ஆண்டுகளாக போராடி வருகிறார்.
அழகிப்போட்டிக்கு நிரந்தர தடைகேட்டு 5 ஆண்டுகளாக போராடும் மாணவி
Published on

சென்னை:

சென்னையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் தென் இந்திய கலாச்சார விழா என்ற பெயரில் கடந்த 2013-ம் ஆண்டு அழகிப் போட்டி நடத்தப்பட்டது. இதில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

இணையதளங்களில் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தப்பட்டு லட்சக்கணக்கில் பரிசும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டியில் சென்னை மாணவி அக்‌ஷயா என்பவரும் கலந்து கொண்டார். சிறந்த மாணவியாக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு மேடையில் பரிசும் வழங்கப்பட்டது. ஒரு கவருக்குள் விசிட்டிங் கார்டை மட்டும் வைத்து கொடுத்துவிட்டு அதிலுள்ள எண்ணில் தொடர்புகொண்டு பரிசு பெற்றுக்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டது.

ஆனால் பரிசு எதுவும் கொடுக்கப்படாமல் மாணவி அலைக்கழிக்கப்பட்டார். இதையடுத்து அக்‌ஷயாவின் தாய் லட்சுமிசுரேஷ் சென்னை ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் ரூ.10 லட்சம் நஷ்டஈடு மற்றும் அழகிப் போட்டிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் மயிலை சத்யா ஆஜராகி வாதாடினார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம் கல்லூரிகளில் அழகிப் போட்டிக்கு தடைவிதித்தது.

5 ஆண்டுகளாக நடைபெறும் இந்த வழக்கில் பதில் மனுதாக்கல் செய்ய பல வாய்ப்புகள் வழங்கப்பட்டும் விழாக்குழுவினர் கண்டுகொள்ளவில்லை.

தற்போது அந்த மாணவி படிப்பை முடித்த நிலையிலும் வழக்கை நடத்தி வருகிறார். இறுதிக்கட்ட விசாரணை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் நடந்தது. அப்போது விழாக்குழுவினர் வருகிற 19-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்தார். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com