சிறுமியை கற்பழித்த ஆசிரியருக்கு தூக்குத்தண்டனை

சிறுமியை கற்பழித்த வழக்கில் ஆசிரியர் மகேந்திரசிங் கோன்ட்டுக்கு தூக்குத்தண்டனை விதித்து சாத்னா கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிபதி தீர்ப்பு அளித்து உள்ளார். #GirlMolestedCase
சிறுமியை கற்பழித்த ஆசிரியருக்கு தூக்குத்தண்டனை
Published on

போபால்:

மத்திய பிரதேச மாநிலம் சாத்னா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த ஜூலை மாதம் சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டார்.

அந்த கிராமத்துக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வரும் ஒப்பந்த ஆசிரியர் மகேந்திர சிங் கோன்ட் சிறுமியை கற்பழித்துள்ளார். இந்த பலாத்கார சம்பவத்தில் சிறுமியின் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் சிறுமியை கற்பழித்த வழக்கில் ஆசிரியர் மகேந்திரசிங் கோன்ட்டுக்கு தூக்குத்தண்டனை விதித்து சாத்னா கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிபதி தினேஷ்குமார் சர்மா தீர்ப்பு அளித்து உள்ளார்.

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்தது.

இந்த சட்டத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமியை கற்பழித்த வழக்கில் வழங்கப்பட்ட 9-வது தூக்குத்தண்டனை தீர்ப்பு இதுவாகும். #GirlMolestedCase

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com