தெலுங்கானா: நண்பர் பிறந்தநாள் விருந்தில் மாணவியை கற்பழித்த 4 மாணவர்கள்

நண்பர் பிறந்தநாள் விருந்தில் பங்கேற்ற மாணவியை சக மாணவர்கள் கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா: நண்பர் பிறந்தநாள் விருந்தில் மாணவியை கற்பழித்த 4 மாணவர்கள்
Published on

ஐதராபாத்:

ஆந்திர மாநிலம் கம்மம் நகரில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் தனது பிறந்த நாளையொட்டி விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். இதில் கலந்து கொள்ளுமாறு தன்னுடன் படிக்கும் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

பிறந்தநாள் விருந்தில் பங்கேற்ற ஒரு மாணவியை சக மாணவர்கள் 4 பேர் கற்பழித்தனர். அதோடு வீடியோ படம் எடுத்தும் மிரட்டினர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கம்மம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மிரட்டப்பட்டவர்களில் யாருடைய பெயரையும் அந்த மாணவி குறிப்பிடவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com