சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 14 ஆண்டு ஜெயில்- கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 14 ஆண்டு ஜெயில்- கோர்ட்டு தீர்ப்பு
Published on

விழுப்புரம்:

புதுவை மாநிலம் கோரி மேடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி லூர்துமேரி. இவர்களுக்கு 11 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு லூர்துமேரி தனது தாய் வீடான வானூர் அருகே உள்ள நாவல்குளத்துக்கு தனது மகளை அழைத்து சென்றார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த சந்திரமோகன் (வயது 36). என்பவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து கோட்டக்குப்பம் மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து சந்திரமோகனை கைது செய்தனர்.

இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சந்திரமோகன் மீது குற்றம் நிருபிக்கப்பட்டதால் அவருக்கு 14 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com