சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மாரண்ட அள்ளி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை குண்டர் தடுப்பு காவலில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி அருகே உள்ள கெண்டையன ஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் கிஷோர் என்கிற பெருமாள் (வயது 27).

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தை சேர்ந்த சிறுமி, கெண்டையன ஹள்ளி கிராமத்தில் வசித்து வரும் தனது உறவினரை பார்ப்பதற்காக அடிக்கடி வந்து சென்றாள்.

இதனை பார்த்த வாலிபர் கிஷோர் அந்த சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து பழக தொடங்கினார். அப்போது அவரது பேச்சு, நடத்தை போன்றவை சரியில்லை என்பதை தெரிந்ததை அடுத்து சிறுமி அவருடனான பழக்கத்தை உடனடியாக துண்டித்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமி தனது உறவினரை பார்க்க வேண்டி ஊருக்கு வந்த போது, கிஷோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் மாரண்ட அள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபர் கிஷோர் என்கிற பெருமாளை கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் இது தொடர்பான வழக்கு ஆவணங்களை இன்ஸ்பெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி காங்காதரிடம் தாக்கல் செய்தார்.

இதையடுத்து அவர், வழக்கு ஆவணங்களை ஆராய்ந்து கிஷோரை குண்டர் தடுப்பு காவலில் அடைக்க மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) சங்கருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் கலெக்டர் சங்கர் குண்டர் சட்டத்தின் கீழ் கிஷோரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com