பள்ளிபாளையம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் சிக்கினார்

பள்ளிபாளையம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கைது
கைது
Published on

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 57). விசைத்தறி தொழிலாளி. இவர், நேற்று அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதையடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று தொழிலாளி வேல்முருகனை மடக்கி பிடித்தனர். பின்னர் பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து அவரை பள்ளிபாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து போலீசார் தொழிலாளி வேல்முருகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்,

X

Maalai Malar
www.maalaimalar.com