வாலாஜா அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

வாலாஜா அருகே 14 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை சைல்டுலைன் அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
சிறுமி திருமணம் நிறுத்தம்
சிறுமி திருமணம் நிறுத்தம்
Published on

வேலூர்:

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்துக்கு வாலாஜா அருகேயுள்ள வாங்கூர் கிராமத்தில் 14 வயது சிறுமிக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக புகார் வந்தன. அதன்பேரில் சைல்டுலைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன், அணி உறுப்பினர் நிரோஷா மற்றும் வாலாஜா போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளியின் 14 வயது மகளுக்கும், மாந்தாங்கல் கூட்ரோட்டை சேர்ந்த 25 வயது வாலிபருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த திருமணத்தை அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் சிறுமியின் பெற்றோரிடம் 18 வயது நிரம்பிய பின்னரே பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சைல்டுலைன் அலுவலர்கள் எழுதி வாங்கிக்கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com