சமயபுரத்தில் நடக்க இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

சமயபுரத்தில் நடக்க இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்திய போலீசார் சிறுமியை திருச்சியிலுள்ள குழந்தைகள் நலக்குழும அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சிறுமி திருமணம் நிறுத்தம்
சிறுமி திருமணம் நிறுத்தம்
Published on

சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் நேற்று காலை சமயபுரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 4 மணி அளவில் கடைவீதியில் சுமார் 16 வயதுடைய ஒரு சிறுமி வாலிபர் ஒருவருடன் நின்று கொண்டிருந்தாள்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை அழைத்து விசாரித்தனர். விசாரணையில் கட்டிட தொழிலாளியான அந்த வாலிபர், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள இலையூரை சேர்ந்த கருணாநிதியின் மகன் வெற்றிவேல் (வயது 25) என்பது தெரியவந்தது. மேலும் அந்த சிறுமி வெற்றிவேலை திருமணம் செய்ய கடந்த 6-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com