மதுரை அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

மதுரை அருகே 13 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் 4 பேர் மீது வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.
சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
Published on

திருமங்கலம்:

தேனி மாவட்டம் போடியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கும், கடலாடியை சேர்ந்த ரமேஷ் 32 என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இவர்கள் திருமணம் மதுரை அருகே உள்ள கீழசெம்பட்டியில் நடக்க இருந்தது. 

இதுகுறித்து சிறுமியின் சித்தப்பா சிந்துபட்டி போலீசில் புகார் செய்தார். இதைதொடர்ந்து அந்த திருமணத்தை அவர்கள் தடுத்து நிறுத்தினர். அதன்பேரில் சிறுமியின் பெற்றோர் உள்பட 4 பேர் சிந்துபட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com