பாலியல் தொல்லை- முன்னாள் எம்எம்ஏ ஜாமீன் மனு 2வது முறையாக தள்ளுபடி

பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனின் ஜாமீன் மனுவை 2வது முறையாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன்
முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன்
Published on

மதுரை:

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் மீது நாகர்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கேட்டு, நாஞ்சில் முருகேசன் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் ஏற்கனவே தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தற்போது மீண்டும் அவர் மதுரை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, இந்த ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். அதன்பேரில் இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com