கோவையில் 3½ வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- முதியவர் கைது

கோவையில் 3½ வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

கோவை:

கோவை மதுக்கரையை சேர்ந்த 3½ வயது சிறுமி சம்பவத்தன்று வீட்டு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார். திடீரென சிறுமி மாயமானர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் சிறுமியை அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது எதிர் வீட்டில் சிறுமி அழும் சத்தம் கேட்டது.

இதனையடுத்து தாய் அங்கு சென்று தேடினார். அப்போது வீட்டுக்குள் சிறுமியை அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி (வயது 60) என்பவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து கொண்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் சிறுமியை முதியவரிடம் இருந்து மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்றார்.

இது குறித்து சிறுமியின் தாய் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3½ வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பழனிசாமியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com