ஈரோட்டில் கருணாநிதி சிலை திறப்பு - உண்டியல் பணம் 1104 வழங்கிய சிறுமி

ஈரோட்டில் கருணாநிதி சிலையை திமுக தலைவர் முக ஸ்டாலின் நாளை மாலை திறந்து வைக்கிறார். சிலை திறப்புக்காக 3-ம் வகுப்பு மாணவி சிறுமி சோபிகா தனது உண்டியல் பணத்தை கொடுத்துள்ளார். #Karunanidhi #DMK
மாவட்ட திமுக செயலாளர் முத்துசாமியிடம் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு உண்டியல் பணம் கொடுத்த சிறுமி
மாவட்ட திமுக செயலாளர் முத்துசாமியிடம் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு உண்டியல் பணம் கொடுத்த சிறுமி
Published on

ஈரோடு:

ஈரோடு முனிசிபல் காலனியில் சென்னை கலைஞர் அறிவாலயத்தில் உள்ளது போல் முழு உருவ கருணாநிதி சிலை வைக்கப்பட்டு உள்ளது.

இந்த சிலையை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (30-ந் தேதி) மாலை திறந்து வைக்கிறார். இந்த சிலை திறப்பு நிகழ்ச்சிக்காக கொடுமுடி அருகே உள்ள சாண்டாம்பாளையம் மேலூரை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவி சிறுமி சோபிகா தனது உண்டியல் பணத்தை கொடுத்துள்ளார்.

இந்த மாணவி தனது தந்தையிடம் வாங்கும் பணத்தை உண்டியலில் சிறுக... சிறுக சேர்த்து வைத்திருந்தார். இந்த உண்டியல் பணத்தை தான் சிறுமி சோபிகா வழங்க முடிவு செய்தார்.

உண்டியலை திறந்து பார்த்தபோது அதில் ரூ.1104 இருந்தது. அந்த பணத்துடன் பெற்றோருடன் ஈரோடு வந்த சிறுமி சோபிகா முன்னாள் அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான முத்துசாமியை சந்தித்து வழங்கினார்.

அந்த சிறுமி கூறும்போது, ‘‘எனக்கு கலைஞர் தாத்தா ரொம்ப பிடிக்கும். கலைஞர் தாத்தா சிலை திறப்புக்காக இந்த பணத்தை கொடுத்துள்ளேன்’’ என்று கூறினார்.  #Karunanidhi #DMK

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com