திண்டுக்கல் அருகே கள்ளக்காதலியை எரித்து கொன்றவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை

திண்டுக்கல் அருகே கள்ளக்காதலியை எரித்து கொன்றவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி மகிளா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
திண்டுக்கல் அருகே கள்ளக்காதலியை எரித்து கொன்றவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே எரியோடு சாமிமுத்தம் பட்டியை சேர்ந்தவர் மதலைமேரி (வயது48). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் செல்வராஜிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு சாலையில் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த மதலைமேரியிடம் தன்னுடன் வருமாறு செல்வராஜ் அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுக்கவே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த செல்வராஜ் மதலைமேரியின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். படுகாயம் அடைந்த மதலைமேரி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இதனை விசாரித்த நீதிபதி கருணாநிதி பெண்ணை எரித்து கொலை செய்த செல்வராஜிக்கு 5 ஆண்டு சிறைய தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com