விக்கிரமசிங்கபுரத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

விக்கிரமசிங்கபுரத்தில் நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலியானார். சென்னையில் இருந்து வந்தபோது அவருக்கு இந்த துயரம் நேர்ந்தது.
விபத்து
விபத்து
Published on

விக்கிரமசிங்கபுரம்:

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் டாணாவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முத்துபட்டன் (வயது 30). சென்னையில் வேலை பார்த்து வரும் இவர், அப்பகுதியை சேர்ந்த ஆனந்தி (27) என்பவருடன் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து சொந்த ஊரான விக்கிரமசிங்கபுரத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் விக்கிரமசிங்கபுரம் மெயின்ரோடு சந்தை அருகே வந்தபோது திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்தது. இதனால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில் இருவரும் கீழே விழுந்தனர்.

இதில் படுகாயம் அடைந்த ஆனந்தி 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஆனந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து வந்த பெண், மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com