வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து கொள்ளை
வீடு புகுந்து கொள்ளை
Published on

செஞ்சி:

செஞ்சி அடுத்த நீர்பெருத்தகரம் என்கிற கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் கிருபா(வயது 20). இவர் நேற்று முன்தினம் தனது தாயாருடன் ஏரி வேலைக்கு சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பிய போது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 2 பவுன் நகை, ரூ.14 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. மர்ம மனிதர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுபற்றி அக்கம்பக்கத்தில் விசாரித்த போது, பூனை பிடிப்பவர்கள் என்று கூறி 5 பேர் வந்ததாகவும், அதில் 2 பேர் வெகுநேரமாக கிருபாவின் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்ததாகவும் தெரிவித்தனர். இதன் மூலம் அவர்கள் தான் திருடி சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com