கூடுதல் கல்விக் கட்டணம் கட்ட மறுத்த 34 மாணவர்கள் நீக்கம்: தனியார் பள்ளி அடாவடி

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் கூடுதல் கல்விக் கட்டணம் கட்ட மறுத்த 34 மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூடுதல் கல்விக் கட்டணம் கட்ட மறுத்த 34 மாணவர்கள் நீக்கம்: தனியார் பள்ளி அடாவடி
Published on

லக்னோ:

உத்தரபிரேதசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறப்பட்டது. அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அதிக கட்டணம் செலுத்த முடியாது என கூறியுள்ளனர். இதனால் பள்ளி நிர்வாகத்திற்கும் பெற்றோர்களுக்கும் இடையே பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை 34 மாணவர்களை அழைத்து செல்ல பள்ளிப் பேருந்து வரவில்லை. இதுகுறித்து பெற்றோர்கள் சென்று விசாரித்த போது மாணவர்கள் கூடுதல் கட்டணம் கட்ட மறுத்ததால் பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட உண்மை தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெற்றோர்கள் மாணவர்களுடன் இணைந்து பள்ளி வாசலின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் வந்து சமாதானம் செய்த பிறகே மாணவர்கள் பள்ளிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இது போன்று மற்றொரு பள்ளியிலும் கட்டணம் செலுத்தாததால் மாணவர்கள் பள்ளி விட்டு நீக்கம் செய்துள்ளனர். இப்பிரச்சனை குறித்து பெற்றோர்கள் மாவட்ட கல்வித்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com