ஜெர்மனி அதிபர் 4 நாள் பயணமாக 22-ம் தேதி இந்தியா வருகிறார்

ஜெர்மனி அதிபர் பிராங்க்-வால்டர் ஸ்டைன்மையர் நான்கு நாள் அரசுமுறை பயணமாக வருகிற 22-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Germany #FrankWalterSteinmeier #IndiaVisit
ஜெர்மனி அதிபர் 4 நாள் பயணமாக 22-ம் தேதி இந்தியா வருகிறார்
Published on

புதுடெல்லி:

ஜெர்மனி அதிபர் பிராங்க்-வால்டர் ஸ்டைன்மையர் நான்கு நாள் அரசுமுறை பயணமாக வருகிற 22-ம் தேதி இந்தியாவிற்கு வருகிறார். 22-ம் தேதி டெல்லி வரும் அவர், 25-ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அவருடன் ஜெர்மனியின் சில முக்கிய தொழிலதிபர்களும் இந்தியா வர உள்ளனர். இந்த வருகையின்போது அவர் சென்னை மற்றும் வாரனாசி நகரங்களுக்கும் செல்வார் என கூறப்படுகிறது. ஜெர்மனியில் நேற்று முன்தினம் புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், ஜெர்மனி அதிபரின் இந்தியா வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஜெர்மனி அதிபர் வருகையின் போது புதுப்பிக்கத்தக்க ஆற்றல், திறன் வளர்ச்சி, ஸ்மார்ட் சிட்டி, நீர் மற்றும் கழிவு மேலாண்மை தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெர்மனி நாட்டின் அதிபராக பதவியேற்ற பின்னர் பிராங்க்-வால்டர் ஸ்டைன்மையர் முதல் முறையாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். முன்னதாக ஜெர்மனியின் வெளியிறவுத்துரை மந்திரி மற்றும் துணை-சான்செலராக இருந்த பொழுது அவர் பலமுறை இந்தியா வந்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது. #Germany #FrankWalterSteinmeier #IndiaVisit

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com